தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில்‘தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா’திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தொடங்கி யது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சிவன்அருள் தலைமை வகித்துப் பேசும் போது, “ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகும் நமக்கு ஆங்கிலம் தான் ஆட்சி மொழியாக இருந்தது. தமிழ் ஆட்சி மொழி சட்டம் வந்த பிறகு தான் கோப்புகள் எல்லாம் தமிழில் எழுதப்பட்டன.

நீதிமன்றங்களில் சம்பந்தப்பட்ட அலுவல்கள் தவிர பிற துறைகள் அனைத்தும் தற்போது தமிழ் மொழிக்கு மாறியிருக்கிறது. இதற்கு, தமிழ் வளர்ச்சித்துறையின் பங்களிப்பு அதிகம். சமஸ் கிருதத்தை விட தமிழ் தான் மூத்த மொழி என்பதற்கான ஆதாரங் களும், சான்றுகளும் கிடைத்திருக் கின்றன. இங்கு மட்டுமல்ல வெளி நாடுகளிலும் தமிழ் வளரத் தொடங் கியிருக்கிறது. தமிழ்ச்சங்கங்கள் பல நாடுகளில் ஆரம்பித்து தமிழ் மணம் வீசத்தொடங்கியிருக்கிறது. எல்லா நாட்டினரும் தற்போது தமிழ் பேசுகிறார்கள். ஆனால், நம்மில் பலர் வீட்டில் மம்மி, டாடி என்பது வழக்கமான பாஷையாக மாறிவிட்டது என பலர் நினைக்கிறார்கள்.

நடைமுறையில் சில அந்நிய வார்த்தைகள் தமிழாகவே மாறி உள்ளது. அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. வார்த் தையில் அவை இருந்தாலும், உணர்வில் தமிழ் தான் ஊறியிருக் கிறது" என்றார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச் சித்துறை உதவி இயக்குநர் சுந்தர், தமிழ் அறிஞர்கள் ரத்தினநடராஜன், சிவராஜி, கருணாநிதி, அக்பர் கவுசர், சந்தானகிருஷ்ணன், இளம்பருதி, தெய்வசுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்