கள்ளக்குறிச்சி மாவட்டம் க.அலம் பலம், பொன்பரப்பட்டு ஆகிய இரு கிராமங்களுக்கு பொதுவான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் தற்போது தண்ணீர் நிரம்பிய நிலையில், பொன்பரப்பட்டு கிராம மக்கள் நெல் பயிரிட்டுள்ளனர். இதனிடையே க.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான தங்கபாண்டியன் என்பவர் பாசன வாய்க்காலை மறித்து அந்த நீரை தான் மீன் வளர்க்கும் பண்ணிக்குட்டைக்கு திருப்பி விட்டதாகவும், அதனால் நெற்பயிர்கள் தண்ணீரின்றி வாடும் நிலை ஏற்பட்டதாக பொன்பரப்பட்டு கிராம மக்கள் கூறி வந்தனர்.
இவ்விவகாரத்தில் தங்கபாண்டி யன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொன்பரப்பட்டு கிராம மக்கள் சுமார் 200 பேர் நேற்று கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago