பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித் துள்ளதாவது: பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு டிச.25 அன்று அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. அதேசமயம் பாரம்பரிய முறைப்படி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் முன் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சிக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய் அறிகுறி உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக் குட்பட்ட குழந்தைகளுக்கு அனு மதியில்லை. சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து வர வேண்டும். உண்டி யலை தொடாமல் காணிக்கை செலுத்த வேண்டும்.
கொடிமரம் உள்ளிட்ட இடங் களில் அமர்வதற்கும், விழுந்து கும்பிடுவதற்கும் அனுமதி கிடையாது. கோயில்களில் இருக் கும் சிலைகளையோ, ஏனைய பொருட்களையோ தொடக் கூடாது. தேங்காய், பழம் கொண்டுவரக்கூடாது. பஜனை யில் ஈடுபட அனுமதியில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago