சட்டப்பேரவை தேர்தலை யொட்டி திருச்சி மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 570 கட்டுப்பாட்டுக் கருவிகள், 230 வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவிகள் வந்தன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவை தொகுதி களிலும் மொத்தம் 2531 வாக் குப்பதிவு மையங்கள் உள்ளன. வரும் சட்டப்பேரவைத் தேர்த லில் திருச்சி மாவட்டத்தில் பயன்படுத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் மகா ராஷ்டிர மாநிலத்தில் இருந்து 1,220 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,490 கட்டுப்பாட்டுக் கருவிகள், 4,560 வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதில், முதல் கட்டமாக மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து நேற்று 570 கட்டுப்பாட்டுக் கருவிகள், 230 வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவிகள் ஆகியன வரப் பெற்றன. மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் அவை இறக்கி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
அப்போது செய்தியாளர்களிடம் ஆட்சியர் சு.சிவராசு கூறியது: திருச்சி மாவட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட அனைத்துக் கருவிகளும் வந்த பிறகு பெல் பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, ஏற்கெனவே உள்ள பதிவுகள் அனைத்தும் அழிக் கப்படும்.அதைத்தொடர்ந்து, மாதிரி வாக்குப்பதிவு நடத்தி கருவிகள் முழுமையாக செயல் படுகின்றனவா என்று உறுதி செய் யப்படும்.
தொடர்ந்து, தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலை யிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். பின்னர், அந்தந்த தொகுதிகளுக்கு உரிய நேரத்தில் அனுப்பப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago