புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 14 செவிலியர் களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்காததால் அவதிக் குள்ளாகியுள்ளனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 14 செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செவிலியர்கள் கூறியபோது, ‘‘மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வான எங்க ளுக்கு மாத ஊதியம் ரூ.14,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதியில்லை என கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப் படவில்லை.
கரோனா பாதிப்புக்கு இடையே மிகுந்த சவாலோடு பணிபுரிந்து வரும் எங்களுக்கு ஊதியம் கூட வழங்கப்படாதது மிகுந்த வேதனை அளிக்கிறது’’ என்றனர்.
இதுகுறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் எம்.பூவதியிடம் கேட்டபோது, ‘‘இவர்களுக்கு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தில் இருந்து சம்பளம் வழங்கப்படுவ தில்லை. நிதி ஆதாரத்தைப் பொறுத்து மொத்த மாகவே வழங் கப்பட்டு வருகிறது. விரைவில் சம்பளம் வழங்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago