உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்கள் எனக் கூறி வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்க அதிமுக சதி செந்தில் பாலாஜி எம்எல்ஏ குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

உயிருடன் இருப்பவர்களை இறந் தவர்கள் எனக்கூறி வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை நீக்க அதிமுக சதி செய்வதாக திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் கலைஞர் அறிவாலயத் தில் நேற்று அவர் அளித்த பேட்டி:

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் தொடர்பாக பணிகள் மேற்கொள் ளப்பட்டபோது, தேர்தல் ஆணை யத்தால் வழங்கப்படாத படிவங் களை அதிமுகவினர் தாங்களே தயாரித்துள்ளனர்.

அதைக் கொண்டு, தற்போது உயிருடன் இருக்கும் பலர் இறந்துவிட்ட தாகவும், தலைமுறை தலைமுறையாக சொந்த வீட்டில் வசித்துவரும் பலர் இடம் பெயர்ந் துவிட்டதாகவும் விண்ணப்பித் துள்ளனர்.

ஒரு வாக்குச்சாவடி முகவர் 30 மனுக்கள் மட்டுமே வழங்க முடியும். ஆனால் ஒவ்வொரு வரும் 100 படிவங்கள் வரை வழங்கியுள்ளனர்.

ஒவ்வொரு வாக்குச் சாவடி யிலும் திமுகவுக்கு ஆதரவான 100 முதல் 200 வாக்குகளை நீக்க திட்டமிட்டுள்ளனர். இத்தகைய தவறுகளை தடுக்க வேண்டிய மாவட்ட தேர்தல் அலுவலர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வாக்குச்சாவடி முகவர்கள் வழங்கிய படிவங்களை அன்றே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். ஆனால், அவ்வாறு செய்வது இல்லை. இந்த முறைகேடுகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்றார்.

அப்போது, திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்