ரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சொர்க்கவாசல் திறப்பு அன்று ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித் துள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வா கம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு டிச.25-ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறை ஆலோ சனையின் பேரில் டிச.24 மாலை 6 மணி முதல் டிச.25-ம் தேதி காலை 8 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.
அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் வழியாக செல்வதற்கும், மூலவர் முத்தங்கி சேவைக்கும் இலவச தரிசனம் மற்றும் ரூ.250 கட்டண தரிசனத் துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இத்திருவிழா காலங்களில் பக்தர்கள் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், விரைவாக தரிசனம் செய்ய ஏதுவாக கோயில் இணையதளமான www.srirangam.org –ல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொண்டு தரிசனம் செய்யலாம். முன்பதிவு செய்த நேரத்திலிருந்து அரை மணி நேரம் முன்னதாக கோயிலுக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago