மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் இரா.முருகன், செயலாளர் த.பாபு செல்வன், பொருளாளர் மு. முத்துசாமி உள்ளிட்டோர் அளித்த மனு:
திருநெல்வேலி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக காலியாக இருக்கும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி) பணியிடத்தை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2017-ம் ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நிரந்தர காலிபணியிடத்தில் நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் மூலம் பணி நியமன ஒப்புதல் ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago