ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள 2,530 மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள், 1,930 மின்னணு கட்டுப் பாட்டு கருவிகள், 2,090 விவிபாட் கருவிகள் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வரப்பெற்றுள்ளன. இவற்றை ஆற்காட்டில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற் பனைக்கூட கிடங்கில் பாதுகாப்பாக வைத் துள்ளனர். இந்த மின்னணு கருவிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் குழுவினர் சரிபார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பு பணிகள் முறையாக நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் மையத்தையும் அவர் ஆய்வு செய்தார். வாக்கு எண்ணும் மையத்துக்கான பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தர விட்டார்.

இந்த ஆய்வின்போது, சட்டப் பேரவை தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை எந்தெந்த அறைகளில் பாதுகாப் பாக வைப்பது குறித்தும், எந்த இடத்தில் வாக்குகள் எண்ணும் மையம் அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் இளம் பகவத், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்