சாத்தனூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் வழியாக செல்லும் தென் பெண்ணையாற்றின் குறுக்கே சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணையின் நீர் மட்டம், வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக 80 அடியாக இருந்தது. அதன் பிறகு அணைக்கு நீர் வரத்து தொடர்ந்ததால், அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்தது.

இந்நிலையில் ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டம் சற்று வேகமாக நிரம்பியது.

இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டம் நேற்று நள்ளிரவு 100 அடியை எட்டியது.

அணைக்கு விநாடிக்கு 222 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 3,747 மில்லியன் கனஅடிக்கு தண்ணீர் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்