தனியார் மயமாக்கும் நடவ டிக்கையை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் கடலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் காத் திருப்பு போராட்டம் நடைபெற்றது.
தமிழக அரசும் மின் வாரியமும், பொதுத் துறையான மின் துறையை படிப்படியாக தனியாருக்கு தாரைவார்க்க திட்டமிட்டு வருகிறார்கள். துணை மின் நிலையங்களையும் சிறு புனல் மின் உற்பத்தி நிலையங்களையும், 50 சதவீதத்திற்கு மேல் காலியாக உள்ள களப்பிரிவு ஊழியர்களின் பதவிகளில் தனியாருக்கு 'வொர்க் கான்ட்ராக்ட்' என்ற பெயரில் விடுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். இதனால் பல ஆண்டுகளாக மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பதவி உயர்வு கேள்விக்குறியாக மாறும். புதியவேலை வாய்ப்புகள் பறிபோகும். எனவே மின் வாரியத் தலைவரின் இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட கேட்டுக் கொள்வதோடு, மின் வாரியத்தை தனியார் மயமாக்கும் அனைத்து உத்தரவுகளையும் திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் கடலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
சிஐடியூ மாநில துணைத் தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். தொமுச மாநில துணைப் பொதுச் செயலாளர் வேல்முருகன், சம்மேளன மாவட்ட செயலாளர் ரவிசங்கர், ஐஎன்டியுசி மாநில துணை செயலாளர் மனோகரன், தொழிலாளர் ஐக்கிய சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், அம்பேத்கர் விடுதலை முன்னணி மாநில அமைப்பு செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் போராட்டம்
மின்வாரியத்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், அரசின் இந்த முடிவை ரத்து செய்ய வலியுறுத்தியும் விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.இப்போராட்டத்தில் விழுப்புரம் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கண்டமங்கலம் ஆகிய 4 செயற் பொறியாளர் அலுவலகங்கள், 89 உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் பணியாற்றி வரும் மின்வாரிய பணியாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் பணியை புறக்கணித்து கலந்து கொண்டனர்.
இப்போராட்டம் காரணமாக மின்வாரிய பழுதை சரிசெய்யும் பணி, மின் கட்டண வசூல் பணி, மின் தொடரமைப்பு பணி உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago