வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த மக்கள்

By செய்திப்பிரிவு

வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன்கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த குள்ளரங்கம்பாளை யத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மக்கள், அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என்.ஆர். வடிவேலு தலைமையில், நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படாததைக் கண்டித்து, தங்களது ரேஷன்கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைத் திரும்ப ஒப்படைக்க வந்ததாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மனு அளிக்க வந்த கிராம மக்கள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த குள்ளரங்கம்பாளையத் தில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக, 60 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இதில், 40 குடும்பங்களுக்கு ஏற்கெனவே வீடுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வில்லை. இட நெருக்கடி காரண மாக, காலியாக உள்ள இடத்தில் ஓலைக்குடிசை அமைத்து குடியிருந்து வருகிறோம்.

பலமுறை வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்து உள்ளோம், என்றனர்.

இதனைத் தொடர்ந்து ஆட்சி யரின் நேர்முக உதவியாளரிடம் அவர்கள் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், ‘விரைவாக வீட்டுமனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக’ உறுதியளித்தார். இதையடுத்து ரேஷன்கார்டு மற்றும் வாக்காளர் அட்டைகளை பொதுமக்கள் எடுத்துச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்