நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற் பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப் பட்டு வெளிமாநிலங் களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் ரயான் துணி நூலின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ரயான் துணிகளை உற்பத்தி செய்யும் விசைத் தறியாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால், நேற்று முதல் வரும் 27-ம் தேதி வரை ரயான் துணி உற்பத்தியை நிறுத்தும் வகையில், வேலைநிறுத்தத்தை தொடங்கி யுள்ளனர். இதுதொடர்பாக ஈரோடு விசைத்தறி உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக ரயான் துணிகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் நூல்கள் விலை அதிகரித்துள்ளது. ஆனால், ரயான் துணி விலை உயரவில்லை. இதனால், விசைத்தறியாளர்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
எனவே, வரும் 27-ம் தேதி வரை 30 ஆயிரம் விசைத்தறிகளையும் இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இதனால் 16.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்படும். இதன் மூலம் ரூ.40 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும். எனவே, நூல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago