மின்வாரியத்தில் தனியார் மூலம் பணி நியமனம் செய்வதை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி யில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் பாக மின் ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு, ஒருங் கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில், 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மின்வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது, தனியார் நிறுவனம் மூலம் பணி யாளர்களை நியமிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவ லகம் அருகே தமிழ்நாடு மின் வாரிய அனைத்து தொழிற்சங்கங் கள் சார்பில் காத்திருப்புப் போராட் டம் நேற்று தொடங்கியது. சிஐடியு வட்டத் தலைவர் அருள் தலைமை வகித்தார். பொறியாளர் சங்க வட்டத் தலைவர் தணிகைச் செல்வன் முன்னிலை வகித் தார். தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் வட்டத்தலைவர் முருகன் வரவேற்றார்.இதில், மின்வாரிய விதி எண் 82-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மின்சார வாரியத்தின் ஒரு பகுதியை தனியார் மயமாக் கும் திட்டத்தை கைவிட வேண் டும். மின்சார ஊழியர் களை நியமிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
230 கிலோ வாட் கொண்ட துணை மின் நிலையங்களின் பராம ரிப்பை தனியார் வசம் ஒப்படைக் கும் திட்டத்தையும் கைவிட வேண் டும். மின்சார வாரியத் தலைவர் தன்னிச்சையாக பிறப்பித்த உத்த ரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago