திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நகர் முழுவதும் ‘எச்சரிக்கை சுவ ரொட்டி’ நேற்று ஒட்டப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டம் அமைக்கும் பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் திட்ட மதிப்பு ரூ.114 கோடியாகும். பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் 2018-ம் ஆண்டு முடிக்கவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. காலக்கெடு முடிந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும், திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை முடிவுக்கு கொண்டு வரவில்லை.
இந்நிலையில், திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்தும், பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் முடிவு பெறாமலேயே சாலையை சீரமைப் பதாக கூறி பல கோடி ரூபாயைகையாடல் செய்துள்ள நகராட்சிஅதிகாரியைக் கண்டித்தும் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பத்தூர் நகர் முழுவதும் ‘எச்சரிக்கை சுவரொட்டி’ நேற்று ஒட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சிநிர்வாகிகள் கூறுகையில், "நக ராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. பாதாள சாக் கடைத் திட்டத்தில் சாலையை சீரமைக்கும் ஒப்பந்த பணியை நகராட்சி அதிகாரியே பினாமி பெயரில் எடுத்து கழிவுநீர் குழாய் அமைக்காத பகுதிகளில் சாலையை சீரமைத்து, அதற்கான தொகையை நகராட்சியில் இருந்து பெற்றுள்ளார். அதேபோல, மின்மோட்டார் பழுது பார்த்தல் பணிக்காக ரூ.7 லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
குடிநீரில் மருந்து தெளிப்பதில் தொடங்கி, அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டி ஏலம் விடுவது வரை பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. இதையெல்லாம் கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட் டம் காங்கிரஸ் கட்சி சார்பில் விரைவில் நடத்தப்படும்’’என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago