வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்து தீக்குளிக்க முயன்ற சம்பவத் தால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருபவர்கள் சில நேரங்களில் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடு படுகின்றனர். இதைத் தடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருபவர்களை காவல் துறையினர் கடுமையான சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பி வைக்கின்றனர். ஆனால், காவலர்களின் சோதனையையும் மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் நேற்று மண் ணெண்ணெய் பாட்டிலுடன் உள்ளே புகுந்து தீக்குளிக்க முயன் றார். அங்கிருந்த காவலர்கள், அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர்.
காவல் துறையினர் விசா ரணையில் அவர், கே.வி.குப்பம் அடுத்த கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த தினகரன் (55) என்பது தெரியவந்தது. மாற்றுத்திறனாளியான இவரது மகளுக் கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. திடீரென இளைஞரின் குடும்பத்தினர் திருமணத்துக்கு மறுத்துவிட்டு தலைமறைவாகினர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக காவல் துறையினரிடம் விசாரித்தபோது, ‘‘தினகரனின் மகளும், அதே கிராமத்தைச் சேர்ந்தவரும் காதலித்துள்ளனர். ஆனால், திருமணம் செய்ய இளைஞர் மறுத்ததால் சில மாதங்களுக்கு முன்பு தினகரன் தரப்பில் லத்தேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது, தினகரனின் மகளை திருமணம் செய்துகொள்வதாக இளைஞர் கூறியதால் காவல் துறையினர் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
பின்னர், கிராமத்தினர் முன்னிலையில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இளைஞரின் குடும் பத்தினர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து தலைமறைவாகினர்.
இது தொடர்பாக லத்தேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டு வழக்கும் பதிவு செய்யப் பட்டது. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.
தினகரன் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினரின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago