நாமக்கல் மாவட்டத்தில் 53 மினி மருத்துவ கிளினிக் அமைச்சர் தங்கமணி தகவல்

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடு சட்டப்பேரவைத் தொகுதிகு உட்பட்ட மங்கலம் மற்றும் துத்திபாளையம் பகுதிகளில் அம்மா மினி மருத்துவ கிளினிக் தொடக்கவிழா நடந்தது. விழாவில் மின் துறை அமைச்சர் பி.தங்கமணி மருத்துவ கிளினிக்குகளைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 53 மினி மருத்துவ கிளினிககுள் தொடங்கப் படவுள்ளது. முதல் கட்டமாக 18 இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்கப்படவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 63 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 9 அரசு மருத்துவமனைகள் அமைந்துள்ளன. இவ்விடங் களைத் தவிர தொலைதூர கிராமங்கள், மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களுக்கு பொது மக்களின் தேவை அடிப்படையில் அம்மா மினி கிளினிக்குகளின் அமைவிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஊரக பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் மருத்துவ கிளினிக் செயல்படும். நகர்ப்புற பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் செயல்படும். பிரதி வாரம் சனிக்கிழமை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் 95 சதவீதம் கடனை திருப்பி செலுத்தியுள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு மேலும் கடனுதவி பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம் படுத்தி கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், திருச்செங் கோடு எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்