கரோனா விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் குடில்

By செய்திப்பிரிவு

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக் காக கிறிஸ்தவ மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். வீடுகளில் ஸ்டார்கள் வைத்து அலங்காரங்கள் செய்துள்ளனர். இவ்வாண்டு கரோனா பாதிப்பு காரணமாக கிறிஸ்துமஸ் கீத பவனிகள் நடைபெறவில்லை. கிறிஸ்துமஸ் குடில் மரங்களில் மின்னும் ஜரிகைகள், சிறிய பந்துகள், ஸ்டார்கள், பரிசுப் பெட்டிகள், பலூன்கள், வண்ண விளக்குகள் வைப்பது வழக்கம்.

ஆனால், கரோனா விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையிலும், முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் வகையிலும் பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாப்புராஜ் தனது வீட்டில் குடில் அமைத்துள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களின் மாதிரி உருவ அட்டைகளை குடிலில் வைத்துள்ளார்.

அவர் கூறும்போது, “ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் குடில்களை வித்தியாசமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைத்து வருகிறேன். இவ்வாண்டு கரோனா பாதிப்பையும், அதை தடுக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளவர் களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் கிறிஸ்துமஸ் குடில் மரத்தை உருவாக்கியிருக்கிறேன். இதுபோல் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குடிலுக்குள் கார்ட்டூன் ஒன்றையும் வைத்திருக்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்