வரும் மே மாதத்துக்குள் வேலூர் புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் மாநகராட்சி ஆணையர் சங்கரன் தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் புதிய பேருந்து நிலை யத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் மே மாதம் பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி ஆணையர் சங்கரன் தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பேருந்து நிலையம் ரூ.45 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, முதல் தளத்தில் வணிக வளாகம், ஆண், பெண் கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தானியங்கி வசதி, பயணிகள் காத் திருப்பு அறை, ஓய்வறை, வாக னங்கள் நிறுத்துமிடம் (பார்க்கிங்) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டுமானப் பணிகள் 45 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

இப்பணிகளை வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கடந்த வாரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்நிலை யில், புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையர் சங்கரன் நேற்று காலை நேரில் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, "புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 45 சதவீதம் நிறைவுப்பெற்றுள்ளன. பயணி களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், நவீன வசதிகளுடன் தரமான பேருந்து நிலையமாகவும் உருவாக்கப்பட்டு வருகிறது.

இப்பணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதம் நிறைவுபெறும் என எதிர்பார்க்கிறோம். கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறை வடைந்து வரும் மே மாதம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு புதிய பேருந்து நிலையம் கொண்டு வர முயற்சிகள் எடுத்து வருகிறோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்