செய்யாறில் நேற்று நடைபெற்ற வாரச் சந்தையில் வெளியூர் வியாபாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர மார்க்கெட் பகுதியில், ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. காய்கறிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர் வியா பாரிகள் விற்பனை செய்து வந்தனர். இதற்கிடையில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் வாரச் சந்தை மூடப்பட்டது.
பின்னர் தமிழக அரசு, ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்ட தால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாரச் சந்தை மீண்டும் தொடங்கியது. அப்போது, வியாபாரம் செய்ய வந்த வெளியூர் வியாபாரி களுக்கு, உள்ளூர் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள், வெளியூர் வியாபாரி களால் கரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என குற்றஞ்சாட்டினர். மேலும் அவர்கள், வெளியூர் வியாபாரிகளால், தங்களது வியாபாரம் பாதிக்கப்படுகிறது என தெரிவித் தனர். அதன் எதிரொலியாக வாரச் சந்தை மீண்டும் மூடப்பட்டது.
இந்நிலையில், வாரச் சந்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது, வெளியூர் வியா பாரிகள், தாங்கள் கொண்டு வந்த பொருட்களை வியாபாரம் செய்துள்ளனர். இதற்கு, உள்ளூர் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அவர்கள், நகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித் தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட் டது. பின்னர், வெளியூர் வியாபாரி களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படாததால், சாலை மறியல் தொடர்ந்தது. இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட உள்ளூர் வியாபாரிகளை காவல் துறை யினர் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதையறிந்த செய்யாறு வணி கர்கள், உள்ளூர் வியாபாரிகளை கைது செய்யப்பட்டதை கண் டித்து, மார்க்கெட் பகுதியில் (செய்யாறு - வந்தவாசி சாலை) சாலை மறியலில் ஈடுபட்டனர். இத னால், புறவழிச் சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட் டது. இதையடுத்து கோட்டாட்சியர் விமலா, துணை காவல் கண் காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட வணிகர் களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களது கோரிக்கையை ஏற்று, கைது செய்யப்பட்ட உள்ளூர் வியா பாரிகளை விடுவித்தனர். மேலும், வாரச் சந்தையில் வியாபாரம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago