வேளாண் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வேலூரில் நேற்று நடைபெற்றது.
வேளாண் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகள் நடத்த ஏற்கெனவே அறிவிப்பு வெளி யானது. வேலூர் மாவட்டத்தில் பன்மாநில வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கண்காணிப்பாளர், விற்பனையாளர், அலுவலக உதவியாளர் என மொத்தம் 44 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.
மொத்தமுள்ள 44 பணியிடங் களுக்கு 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 3,507 பேருக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. பன்மாநில கூட்டுறவு சங்கத்தில் கண்காணிப்பாளர், விற்பனையாளர் மற்றும் அலு வலக உதவியாளருக்கான எழுத்துத்தேர்வுகள் வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளி, வெங்க டேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, ஈவெரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 14 மையங்களில் இத்தேர்வுகள் நேற்று நடைபெற்றன.
கண்காணிப்பாளர்களுக்கான தேர்வு காலையிலும், விற்பனை யாளர் மற்றும் அலுவலக உதவி யாளர் பணிக்கான தேர்வு பிற்பகலிலும் நடைபெற்றது. இத்தேர்வில் 3,480 பேர் கலந்து கொண்டனர்.
தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க பறக்கும் படை மற்றும்கண்காணிப்பு குழு அமைக்கப் பட்டிருந்தது. தேர்வர் களுக்கான அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சாரம், காவல் துறை பாதுகாப்பு, பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வேலூரில் நடைபெற்ற எழுத்துத் தேர்வுகளை கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago