ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் மத்திய திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் (திஷா),திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும், வளர்ச்சி கண்காணிப்புக் குழுத் தலைவருமான கே.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் ஆட்சியர் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து கண்காணிப்புக் குழுத் தலைவர் ஜெயக்குமார் கூறியதாவது:
திட்டங்கள் குறித்து விவாதம்
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவானது மத்திய, மாநில அரசுகளால் நிதி அளிக்கப்பட்டு மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணித்து வருகிறது. வருங்காலங்களில் அதிக நிதியை பெற்று பல்வேறு திட்டப் பணிகளைசெயல்படுத்த இக்குழு கூட்டத்தில் திட்டமிடப்படும்.இக்கூட்டத்தில், மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், தேசிய கிராம நகரத் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், தீன் தயான் உபாத்யா கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம், மதிய உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், தேசிய சமூக நலத் திட்டம், பிரதம மந்திரியின் ஒளிமயமான திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது என்றார்.
இக்கூட்டத்தில் பூவிருந்தவல்லி எம்எம்ஏ கிருஷ்ணசாமி, மாதவரம் எம்எம்ஏ சுதர்சனம், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, அனைத்து ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago