ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவரை தேட வலியுறுத்தி சாலை மறியல்

By செய்திப்பிரிவு

விக்கிரவாண்டி அருகே தொரவி கிராமத்தில், நேற்று முன்தினம் மாலை வராக ஆற்றில் குளிக்கச் சென்ற பிளஸ் 2 படிக்கும் மாணவர் தமிழ்வேந்தன் (18) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக தேடிய நிலையில் , நேற்று பகல் 12 மணியளவில் மாணவனை தேட கூடுதலாக மீட்பு குழுவினரை நியமிக்க கோரி பொதுமக் கள் விழுப்புரம் – திருக்கனுார் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர் .

தகவலறிந்த விழுப்புரம் கோட் டாட்சியர் ராஜேந்திரன்,மண்டல துணை வட்டாட்சியர் முருகதாஸ் உள்ளிட்டோர் போராட்டம் நடத்திய வர்களிடம் பேச்சு வார்த்தைநடத்தினர். மக்கள் கோரிக்கைபடி கூடுத லாக மீட்புக்குழு நியமிக்க ஏற்பாடு செய்ததால் பிற்பகல் 1 மணி யளவில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் விழுப்புரம்- திருக்கனுார் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, மீன் வளத் துறையைச் சேர்ந்த் 7 பேர் கொண்ட குழுவினர் படகுடன் வந்து தேடுதல் பணியில் தீவிரமாக தொடர்ந்து ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்