ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக மதுரை அவனியாபுரம், அலங் காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காளைகளுக்குப் பயிற்சி அளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆண்டின் முதல் ஜல்லிக் கட்டுப்போட்டி பொங்கல் பண்டிகை தினத்தில் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும். அதற்கு அடுத்தடுத்த நாட்களில் பாலமேட்டிலும், அலங்கா நல்லூரிலும் இப்போட்டிகள் நடைபெறும். அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட் டிகள் களைகட்டும்.
தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியி டப்படவில்லை. அதேநேரம், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்நல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நிர்வாகிகள் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளனர். பரிசுப் பொருட்களுக்கான நிதியை நன் கொடையாளர்களிடம் இருந்து திரட்டும் பணியை தற்போதே மேற்கொண்டால்தான் குறித்த நேரத்தில் ஜல்லிக்கட்டை விமரிசையாக நடத்த முடியும் என்ற கட்டாயத்தில் விழா குழுவினர் உள்ளனர். பல இடங்களில் கரோனா கட்டுக்குள் வந்துவிட்டதால், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பதற்கு வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில் விழா குழுவினர் உள்ளனர்.
இதனால், அவனியாபுரம், பால மேடு, அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காளைக ளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் பணியை அதன் உரிமையாளர்கள் தொடங்கியுள்ளனர். மணலை குவித்து வைத்து கொம்பால் குத்த வைத்து பயிற்சி அளிப்பது, நடைப்பயிற்சி, கண்மாய்களில் நீச்சல் பயிற்சி போன்றவற்றை காளைகளுக்கு அளிக்கின்றனர். மாடுபிடி வீரர்களும், காளைகளை அடக்குவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுத் தலைவர் ஜே.சுந்தர்ராஜன் கூறுகையில், இந்த முறை வழக்கம்போல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். அரசின் விதிமுறைகளின்படி போட்டியை நடத்த அனுமதி கேட்டு வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இது தொடர்பாக முதல்வரிடம் அனுமதி பெற்றுத் தருமாறு அமைச்சர்களிடமும் வலியுறுத்தியுள்ளோம். விரைவில் இதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago