தேனியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊரடங்கு தளர்வில் மதுக் கடைகளை திறக்கவும், அரசு நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், சொர்க்கவாசல் திறப்பு, மார்கழி மாத பஜனை நடத்துவதற்கு அனுமதி வழங்காத தமிழக அரசை கண்டிக்கிறோம்.
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைப் பகுதி மற்றும் கம்பம் பகுதியில் உளவுத் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து நக்சலைட்டுகளை கைது செய்ய வேண்டும். தேர்தலை மையமாக வைத்து, தமிழகத்தில் பெரிய கலவரத்தை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. நாட்டில் நடக்கும் போராட்டங்களின் பின்னணியில் வெளிநாடுகளின் ஆதிக்கம் உள்ளது. கோயில்களை விட்டு அறநிலையத் துறை வெளியேற வேண்டும். அரசியல்வாதிகளின் பிடியில் உள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும். மதமாற்றத் தடைச் சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்குத்தான் இந்து முன்னணி ஆதரவளிக்கும். இந்துக்களை அவமரியாதை செய்வதுடன், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கூட்டு வைத்துள்ள திமுக ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago