கரோனா தடுப்பூசி வழங்க ஏதுவாக மருத்துவப் பணியாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆட்சியர் அறிவுரை

திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி வழங்குவதற்கு முன்னு ரிமை அடிப்படையில் அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தங்களது மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்களை இணையதளத்தில் டிச.22-ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு ஆட்சியர் சு.சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு கரோனா தடுப்பூசி மருந்தை இலவசமாக வழங்க உள்ளது. இதற்கான பயனாளிகள் விவரங்களை https://hmis.nhp.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

இதன் முதல்கட்டமாக மருத்துவமனையைச் சார்ந்த அனைத்து அலுவலர்கள், முன் களப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவது என முடிவு செய்யப் பட்டுள்ளது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகள், தனியார் மருத்துவ மனைகள், கிளினிக்குகள் மற்றும் ஆயுஷ் போன்ற கிளினிக்கல் எஸ்டாபிலிஷ்மென்ட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பெற்ற அனை வரிடமும் பணியாளர்கள் விவரங் களை சமர்ப்பிக்க வேண்டும் என நவ.2-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, அனைத்து அரசு மருத்துவமனைகளின் விவரங் களும் 100 சதவீதம் சேகரிக்கப்பட் டுள்ளன. மேலும், மாவட்டத்தில் கிளினிக்கல் எஸ்டாபிலிஷ் மென்ட் சட்டத்தின் கீழ் 1,389 தனியார் மருத்துவமனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதில், டிச.18 வரை 370 மருத்துவமனைகள் மட்டுமே தங்களது விவரங்களை பதிவு செய்துள்ளன. மற்ற மருத்துவமனைகள் விவரங்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை.

எனவே, இதுவரை பதிவு செய்யாத மருத்துவமனைகள் தங்களது பணியாளர்களின் விவ ரங்களை மேற்கண்ட இணை யதள முகவரியில் டிச.22-ம் தேதிக்குள் பதிவு செய்து, அது குறித்த விவரத்தை, திருச்சி இணை இயக்குநரின் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) trichy.jdhs@gmail.com மற்றும் dphtry@nic.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பதிவு செய்த மருத்துவமனைகளுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்