அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல் ஆர்டிஓ உட்பட 8 பேர் மீது நடவடிக்கை?

அரியலூர் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆர்டிஓ உட்பட 8 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரியலூரை அடுத்த கீழப் பழுவூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் டிஎஸ்பி சந்திரசேகர் தலைமை யிலான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அலுவலகத்தில் இருந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், அலுவலக ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.1.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு தொடங்கிய சோதனை மற்றும் விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது. மேலும், இது தொடர்பாக வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் வெங்கடேசன், அலுவலக ஊழியர்கள் 2 பேர் மற்றும் இடைத்தரகர்கள் 5 பேர் என 8 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந் துரைக்கப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE