திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள நயினார்குளம் சாலை மற்றும் இதர சில இடங்களில் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேட்டை - பழைய பேட்டை இணைப்புச் சாலையில் சரக்கு வாகன முனையம் அமைக்கும் பணி நடைபெற்றது.
நவீன வசதிகளுடன் கூடிய வகையில் 4 முன்பதிவு செய்யும் அறைகள், 21 தங்கும் அறைகள், 2 விருந்தினர் தங்கும் அறைகள், 3 பொதுக்கழிப்பிடங்கள், 2 சிற்றுண்டிகள், 12 கடைகள் ஆகியவை இதில் அமைந்து ள்ளன. இங்கு நிறுத்தப்படும் வாகனங்களை பாதுகாக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டுள்ளது.
இந்த சரக்கு வாகன முனையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி செயற்பொறியாளர் என்.எஸ். நாராயணன் தலைமை வகித்தார்.
மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் பிரதிநிதிகள், மாநகராட்சி உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், காவல் உதவி ஆணையர் முத்தரசு, போக்கு வரத்து காவல் ஆய்வாளர் செந்தா மரை கண்ணன் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago