தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதி களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்கள் திருநெல் வேலி ராமையன்பட்டி யில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மகாராஷ் டிரா மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வந்துள்ளன.
இங்கு 20 சதவீதம் கூடுதல் இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன.
மொத்தம் 3,334 வாக்கு இயந்திரங்கள் உள்ளன என்றார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் நேற்று தூத்துக்குடி கொண்டுவரப்பட்டன.தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
2,500 வாக்குப்பதிவு அலகுகள், 2,410 கட்டுப்பாட்டு அலகுகள், 2,670 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் ஆகியவை வரப்பெற்றுள்ளன. கடந்த தேர்தலின்போது பயன்படுத்த ப்பட்ட 700 வாக்குப்பதிவு அலகு கள், 300 கட்டுப்பாட்டு அலகுகள், 300 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் ஆகியவை தயாராக உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 1,603 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடத்த தற்போது வரப்பெற்றுள்ள இயந்திரங்கள் போதுமானதாகும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago