ஆவின் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் தொகை வழங்கும் விழா மற்றும் ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பால் கூட்டுறவு சங்க கட்டிடம் திறப்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த பொலக்குணம் கிராமத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். சங்க கட்டி டத்தை திறந்து வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2.13 லட்சம் போனஸ் தொகையை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, “இந்த கிராம மக்கள் மூலம் ஆவினுக்கு தினசரி 984 லிட்டர் பால் ஊற்றப்படுகிறது. அவ்வாறு, ஆவினுக்கு முக்கியத்துவம் கொடுத்து பால் ஊற்றும் தாய்மார்களுக்கு லாபத்தில் போனஸ் வழங்கப் படுகிறது. கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான கால்நடை மருத்துவமனை அமைக்க, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார். துணை பதிவாளர் (பால்வளம்) விஸ்வேஸ்வரன், பொது மேலாளர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago