செஞ்சி அருகே முகமூடி கொள்ளை யர்கள் வீடு புகுந்து 37 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
செஞ்சி அருகே ஜெயகொண்டான் - விநாயகபுரம் கூட்டுச் சாலையில் சகாயராஜ் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.அவர் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி வசந்தி மேல்மலையனூர் அருகே தொரப்பாடி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரி யையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் சகாயராஜ் வீட்டின் பின்பகுதி வழியாக மாடியில் ஏறி அங்கிருந்த கதவை உடைத்தனர்.
அப்போது சத்தம் கேட்ட சகாயராஜ், கீழ்வீட்டின் கதவை திறந்து வெளியில் வந்தார். அப்போது 2 கொள்ளையர்கள் அவரை வீட்டிற்குள் இழுத்து சென்றனர். இதையடுத்து மற்ற 3 கொள்ளையர்களும் சகாயராஜ் வீட்டில் நுழைந்தனர். சகாயராஜ், அவரது மனைவி வசந்தி மற்றும் குழந்தைகள் ஆகியோர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். வசந்தியிடம் நகைகளை கழட்டி கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். பயந்த வசந்தி அனைத்து நகைகளும் கழட்டி கொடுத்துள்ளார். பின்னர் கொள்ளையர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த 37 பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இத்தகவலறிந்த எஸ்பி ராதாகிருஷ்ணன், செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன் தலை மையிலான போலீஸார் கொள்ளை நடந்த வீட்டிற்குச் சென்றனர். சகாயராஜ், அவரது மனைவி வசந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் சாய்னா சிறிது தூரம் ஓடி, தனியார் வங்கி அருகே நின்றது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன.
இதுகுறித்து செஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். "தீரன் அதிகாரம் 1" திரைப்பட பாணியில் இக்கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago