நெல்லையில் நடக்கும் கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் வழியில் விருதுநகர் வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீர் மேலாண்மையில் தமிழகம் சிறந்து விளங்கக் காரணமாக இருப்பவர் முதல் வர் பழனிசாமி தான். 70 வயதில் ஓய்வு பெறும் நேரத்தில் பொது வாழ்வில் ஈடுபட வருபவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சினிமாவில் நடிக்க வாய்ப் பில்லாமல் தற்போது மக்களுக்கு தனது கால்ஷீட்டை கமல்ஹாசன் வழங்கி வருகிறார். இதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்ஜிஆரின் வாரிசு எனக் கூறுவது உண்மையானால் அவர் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவைப் பற்றியும், அதில் உள்ள தொண்டர்களைப் பற்றியும் தவறாகப் பேச மாட்டார். மேலும் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை தவறாகப் பேசிவிட்டு அவரது வாரிசு எனக் கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது கமல்ஹாசனின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.
கமல்ஹாசனின் தனி மனித வாழ்க்கையைப் பற்றி பேசினால், அவர் வெளியில் தலைகாட்ட முடியாமல் போகும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago