கோபி அருகே இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, கோபி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த நஞ்சைகோபி ஊராட்சி புதுக்கரைபுதூர் கிராமத்தில் வசித்து வந்த 197 நபர்களுக்கு, 1993-ம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதில், 97 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, வேறு சிலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்தும், மீண்டும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க வலியுறுத்தியும் கோபி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்ற பொதுமக்கள், அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் வட்டாட்சியர் தியாகராஜு உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வழங்கப்பட்டுள்ள வீட்டுமனைப் பட்டாக்களில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago