வீடு கட்டித் தருவதாகக் கூறி பல கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு எஸ்.பி.யிடம் புகார்

By செய்திப்பிரிவு

ஈரோடு விஜயமங்கலத்தில் வீடு கட்டித் தருவதாகப் பணம் பெற்று மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலத்தில் செயல்பட்டு வந்த கட்டுமான நிறுவனத்தினர், வீடு கட்டித் தருவதாகக் கூறி ஏராளமானவர்களிடம் பணம் பெற்றுள்ளனர். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு மத்திய அரசின் வீடு கட்டித் தரும் திட்டத்தின் கீழ், அனைத்து வசதிகளைக் கொண்ட வீடுகளைக் கட்டித் தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடு கட்டுவதற்காக லட்சக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட கட்டுமான நிறுவனத்தினர், உறுதியளித்தபடி வீடு கட்டித் தரவில்லை. தங்களது பணத்தை திரும்ப வழங்குமாறு பலரும் கேட்ட நிலையில், கட்டுமான நிறுவன உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட வர்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

வீடு கட்டித் தரும் திட்டத்தில் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் 119 பேர் தற்போது மனு கொடுத்துள்ளோம். மேலும், பலர் ஏமாந்துள்ளனர்.

எங்களின் சொந்தவீடு ஆசையைப் பயன்படுத்தி ரூ.45 கோடி வரை மோசடி நடந்து இருக்கலாம் எனக் கருதுகிறோம். எங்களது பணத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளோம், என்றனர். மனுவைப் பெற்றுக்கொண்ட எஸ்பி தங்கதுரை, இதுகுறித்து குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரிக்க உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்