திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூரில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் உலக்குடி கிராமத் தில், பட்டியலின சமூகத்தி னருக்கு முடிதிருத்தம் செய்த தொழிலாளியை குடும்பத்துடன் ஊரைவிட்டு விலக்கிவைத்துள் ளதைக் கண்டித்து, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங் களில் முடிதிருத்தும் தொழிலாளர் கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் திருச்சி மாநகர், தெற்கு மாவட்டங்கள் சார்பில், ஆட்சியர் அலுவலகம் அரு கில் மாவட்டத் தலைவர்கள் செல்வராஜ், தங்கவேல் ஆகியோர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர்கள் தர்மலிங்கம்(மாநகர்), பாலசுப்பிரமணியன்(தெற்கு) மற்றும் கவிஞர் திருவைக்குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் நெ.1 டோல்கேட் சந்திப்புப் பகுதி யில் மாவட்டத் தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இளைஞரணிச் செயலாளர் மாரிமுத்து, மண்ணச்சநல்லூர் கிளைத் தலைவர் செந்தில்குமார், ரங்கம் கிளைச் செயலாளர் ராஜலிங்கம், பொருளாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.

இதேபோல, தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சங்கத்தின் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கோவிந்தராஜ், செந்தில்குமார், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம்.ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.லட்சுமிகாந்தன், பொருளாளர் டி.இளங்குமார், நகரத் தலைவர் எம்.தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல, கும்பகோணம் காந்தி பூங்கா அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டியலின சமூகத்தி னருக்கு முடிதிருத்தம் செய்த தொழிலாளியை குடும்பத்துடன் ஊரைவிட்டு விலக்கிவைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE