தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி ஆட்சியர் சமீரன் தலைமை வகித்தார். அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி 33 பயனாளிகளுக்கு 27.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
தென்காசி மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்கு விவசாயிகளின் வாழ் வாதாரத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் வேளாண்மைத்துறை மூலம் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வழங்கப் படுகின்றன. ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் மூலம் விவசாயத்தில் ஒரு பண்ணைத் தொழிலை மட்டும் மேற்கொள்ளாமல், ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பண்ணைத் தொழிலை மேற்கொண்டு நீர்வளத்தை சிறப்பாக பயன்படுத்தினால் அதிக லாபம் ஈட்டி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்றார்.
சுழல்கலப்பை, விசைத்தெளிப் பான், கறவை மாடுகள், பவர்டில்லர் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் முருகசெல்வி, வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சேதுராமலிங்கம் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago