வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் திருடுபோன 14 இருசக்கர வாகனங்களை போலீஸார் மீட்டுள்ளனர். வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வள்ளியூர் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடுபோயின. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க எஸ்பி மணி வண்ணன் தனிப்படை அமைத்தார். வள்ளியூர் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பொன்சன் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். வாகனங்களை திருடியது தொடர்பாக திருக்குறுங்குடியைச் சேர்ந்த அருண்குமார்(23), ஊத்தடியைச் சேர்ந்த மதன்(24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
மாற்றுத்திறனாளிக்கு உதவி
களக்காடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அருணாச்சலம் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை செய்ததில் அவரது குடும்பம் ஏழ்மையில் வாடுவது தெரியவந்தது. அவருக்கு நாங்கு நேரி டிஎஸ்பி லிசா ஸ்பிலா தெரஸ் ரூ.10 ஆயிரம், களக்காடு இன்ஸ்பெக்டர் ரூ.5 ஆயிரம் வழங்கினர். அருணாச்சலம் மகள் பெயரில் களக்காடு எஸ்பிஐ வங்கி கணக்கில் அவரது படிப்பு செலவுக்காக இந்த பணம் செலுத்தப்பட்டது. களக்காடு காவல்துறையினரின் மனிதநேயமிக்க செயலை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago