வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்போன் திருட வந்ததாகக் கூறி இளைஞர் மீது பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தி காவல் துறை யினர் வசம் ஒப்படைத்தனர்.
வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரசவ வார்டின் அருகே காத்திருப்பு அறை உள்ளது. இங்கு, பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் பெண்களின் உறவினர்கள் இரவு நேரங்களில் தங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இந்த அறைக்கு சுடிதார் அணிந்த ஒரு பெண், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றார். அங்கு ஏற்கெனவே தங்கியிருந்தவர்கள் அந்தப் பெண்ணை சந்தேகத்தோடு அணுகி விசாரித்தனர்.
அப்போது, அந்த பெண்ணின் குரல் ஆண் போல் இருந்ததால் சுற்றியிருந்தவர்கள் சந்தேகம் அடைந்து அவரது தலைமுடியை பிடித்தபோது தனியாக கழன்று வந்தது.
அவர் பெண் வேடமிட்டு குழந்தையை கடத்த அல்லது செல்போன் திருட வந்திருக்கலாம் என நினைத்த பொதுமக்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்து புறக்காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்தவர் என்றும் கல்லூரியில் படித்து வரும் அவர் கடந்த சில மாதங்களாக பெண்களின் உடையணிந்து ஆங்காங்கே சுற்றி வருவது தெரிய வந்தது. அவரது உறவினர்களை அழைத்து விசாரணை செய்த காவல் துறையினர் அவரின் விவரங்களை சேகரித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago