வேலூர் மாவட்டத்தில் பெரியம்மை நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் மாடு களுக்கான பெரியம்மை நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு தாது உப்பு பாக்கெட்டுகளை வழங்கினார்.

வேலூர் மாவட்டம் அணைக் கட்டு அடுத்த வசந்தநடை கிராமத்தில் மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் குறித்து கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன் விவசாயிகளுக்கு தாது உப்பு பாக்கெட்டுகளையும் வழங்கினார்.

முகாமில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘மாடுகளுக்கு பெரியம்மை நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மாட்டு தொழுவங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கிருமி நாசினிகள், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை தெளிக்க வேண் டும்.

மாடுகளை பெரியம்மை நோய் தாக்கினால் அதனை தனிமைப் படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். நாட்டு மருந்துகளை உபயோகிக்க கூடாது. அரசு மருத்து வர்கள் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். பசுவுக்கு பெரியம்மை பாதிப்பு ஏற்பட்டால் அவற்றின் பாலை கறப்பதற்கு முன்பாக கை களை நன்றாக வெந்நீரால் சுத்தம் செய்த பிறகே பால் கறக்க வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை இணை இயக்குநர் நவநீத கிருஷ் ணன், உதவி இயக்குநர் அந்து வன், கால்நடை மருத்துவர்கள் மோகன்குமார், சுபத்ரா மற்றும் வட் டாட்சியர் சரவண முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவர்மன் ஆகியோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்