பழங்குடியின மாணவியர் செவிலியர் பட்டயப்படிப்பு படிக்கத் தேவையான கல்விக் கட்டணம் உள்ளிட்டவற்றை அரசு ஏற்கிறது. இதற்கு இம்மாதம் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் 2019-2020-ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற பழங்குடியின மாணவியர் செவிலியர் பட்டயப்படிப்பு படிக்க தேவையான கட்டணத்தை அரசு ஏற்கிறது. இதன்படி கல்விக் கட்டணம், புத்தகக் கட்டணம், விடுதிக்கட்டணம், சீருடைக் கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்கள் ஒரு மாணவியருக்கு ரூ.70,000 முழுவதையும் அரசு ஏற்கிறது. இதில் பயன்பெற தங்களது சாதிச்சான்று மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றுடன் விருப்பக் கடிதத்தை வரும் 23-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது ராசிபுரம் அருகே முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேரில் வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago