வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கோபியில் காங்கிரஸ் ஏர்கலப்பை ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி கோபியில் காங்கிரஸ் சார்பில் ஏர்கலப்பை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோபி பேருந்து நிலைய பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமை வகித்துப் பேசியதாவது:

மத்திய அரசின் வேளாண்மைச் சட்டங்கள் விவசாயிகளை அடிமைகளாக மாற்றும். இதற்கு அடுத்ததாக விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தையும் ரத்து செய்து விடுவார்கள். ஏழை மக்கள் பயன்பெறும் 100 நாள் வேலைத்திட்டத்தையும் மத்திய அரசு ரத்து செய்து விடும், என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சத்தியமங்கலம், அந்தியூர், நம்பியூர், பவானி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்