நெல்லையில் வரும் 27-ம் தேதி சமூகநீதி நூற்றாண்டு மாநாடு நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாநாடு ஒருங்கி ணைப்பு குழு பொறுப்பாளர் சூர்யா சேவியர் கூறியதாவது:
சமூகநீதிக்கான போராட்டத்தை இந்திய அளவில் முன்னெடுத்ததில் தமிழகம் முதன்மையானது. 1916-ல் தென்னிந்திய நலஉரிமை சங்கம் தொடங்கப்பட்டது. 1919-ல் காங்கிரஸில் இணைந்த பெரியார், 1920 ஜூன் மாதம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை எழுப்பினார். சமூகநீதிக்கான பெரியாரின் குரல் திருநெல்வேலியிலிருந்தே ஒலித்தது.
இதன் நூற்றாண்டு விழா மாநாடு, வரும் 27-ம் தேதி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறுகிறது. பொதுவுடமை இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தொடங்கி வைக்கிறார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பேசுகிறார், என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago