திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் மழை நீடிக்கிறது.
மாவட்டத்திலுள்ள அணைப் பகுதிகளிலும் பிறஇடங்களிலும் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.):
பாபநாசம்- 1, சேர்வலாறு- 5, மணிமுத்தாறு- 8.6, அம்பா சமுத்திரம்- 2, சேரன்மகாதேவி- 2, நாங்குநேரி- 1.50, பாளையங் கோட்டை- 5.20, திருநெல்வேலி- 4.50.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 140.80 அடியிலிருந்து 141.20 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு 1,504 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு நீர்மட்டம் 148.46 அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 105.85 அடியாக உள்ளது. அணைக்கு 872 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து 480 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 49 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்குபச்சையாறு நீர்மட்டம் 25 அடியாகவும், 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு நீர்மட்டம் 10.62 அடியாகவும் இருந்தது. 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு நீர்மட்டம் 27 அடியாக இருந்தது. அணைக்கு 26 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 40 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
இதே போல் கடையம், பாவூர் சத்திரம் உட்பட பல பகுதி களிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago