சேத்துப்பட்டில் 76 மி.மீ., மழை பதிவு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் 76 மி.மீ., மழை பதிவானது.

தி.மலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. மாவட்டத் தில் அதிகபட்சமாக சேத்துப்பட்டு பகுதியில் 76.4 மி.மீ., மழை பதிவானது. மேலும், ஆரணியில் 31.8, செய்யாறில் 29, செங்கத்தில் 6.8, ஜமுனாமரத்தூரில் 6, வந்தவாசியில் 18.2, போளூரில் 15.4, தி.மலையில் 20, தண்டராம்பட்டில் 50.4, கீழ்பென் னாத்தூரில் 49.4, வெம்பாக்கத்தில் 30 மி.மீ அளவு மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 27.78 மி.மீ., மழை பெய்துள்ளது.

அணைகளும் நிரம்புகிறது

119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 98.75 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 243 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 3,574 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 14 மி.மீ., மழை பெய்துள்ளது.

60 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 41.98 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 109 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 329.60 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 3.1 மி.மீ., மழை பெய்துள்ளது.

22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 20 அடியாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. அணைக்கு வரும் 30 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையில் 70.713 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 8 மி.மீ., மழை பெய்துள்ளது. 62.32 அடி உயரமுள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 58.02 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணைக்கு வரும் 75 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளி யேற்றப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்