கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெற்றதையடுத்து, அண்ணா மலை மீது நேற்று புனித நீர் தெளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் கடந்த மாதம் 29-ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு ஜோதி வடிவமாக பக்தர்களுக்கு அண்ணாமலையார் காட்சிக் கொடுத்தார்.
இதையடுத்து, மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட்ட கொப்பரை, கடந்த 10-ம் தேதி காலை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், கொப் பரைக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதையடுத்து, மகா தீபக் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்படும் கரு மை, ஆரூத்ரா தரிசனத்தின்போது, நடராஜருக்கு சார்த்தப்பட்டு, பிரசாத மையாக, பக்தர்களுக்கு வழங்கப்படும்.
இதற்கிடையில், மலையே மகேசன் என போற்றப்படும் அண்ணாமலை மீது புனித நீர் தெளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் உள்ள மூலவர் சன்னதி முன்பு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, புனித நீர் நிரப்பப்பட்ட கலசம் கொண்டு செல்லப்பட்டது.
பின்னர், அண்ணாமலை மீதும் மற்றும் தீப ஏற்றப்பட்ட இடத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும், மலை உச்சியில் உள்ள சுவாமியின் பொற் பாதங்கள் மீது புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago