வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே, அகிலஇந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் திருப்பூர் மாவட்டம் சார்பில், 3-வது நாளாக நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கொமதேக ஒருங்கிணைந்த விவசாய அணி மாவட்ட செயலாளர்கே.தேவராஜ் தலைமை வகித்தார்.திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.செல்வராஜ், வடக்குமாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், சிபிஎம் மாவட்டசெயலாளர் செ.முத்துக்கண்ணன், சிஐடியுமாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன், பெரியார் உணர்வாளர்கூட்டமைப்பு சார்பில் சண்முத்துக்குமார், புரட்சிகர இளைஞர் முன்னணி ரமேஷ், அகில இந்தியவழக்கறிஞர் சங்க மாவட்ட செயலாளர் பொன்ராம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் சுப்பிரமணியம் ஆகியோர் பேசினர்.9 பெண்கள் உட்பட 60 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதேபோல உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்மாவட்டச் செயலாளர் ரகுபதிராகவன் தலைமையில் நேற்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.தமிழக விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன், காங்கிரஸ் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 60 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago