சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 18 அரசு மருத்துவமனைகளில் 14 மருத்துவமனைகளுக்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்கு வரும் கர்ப் பிணிகளின் எண்ணிக்கை அதி கரிக்கும் வகையில் சீமாங் திட் டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவம னைகளில் தனியாக மகப்பேறு வார்டுகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்க வேண்டும். மேலும் மகப்பேறு மருத்துவரும் நியமிக்கப்பட வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தவிர்த்து காரைக்குடி, தேவகோட்டை, இளையான்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, திருப்புவனம், காளையார்கோவில், மானாமதுரை உள்ளிட்ட 18 இடங்களில் அரசு மருத்துவமனைகள் உள்ளன.
இதில் காரைக்குடி, தேவ கோட்டை, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய 4 மருத்துவ மனைகளில் மட்டுமே மகப்பேறு மருத்துவர்கள் உள்ளனர். மற்ற மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர் பணியிடங்கள் காலி யாக உள்ளன.
இதனால் பிரசவங்களை செவிலியர்களே பார்க்கின்றனர். மேலும் சிக்கலான பிரசவங்களாக இருந்தால், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கர்ப்பிணிகளை அனுப்புகின்றனர். அரசு மருத்துமனைகளில் மகப் பேறுக்கு போதிய வசதிகள் இருந் தும், மருத்துவர்கள் இல்லாததால் கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மகப்பேறு மருத் துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமெனக் கோரிக்கை எழுந் துள்ளது.
இதுகுறித்து மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் கூறு கையில், அரசு ஒதுக்கீடு அடிப் படையில்தான் மருத்துவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
மகப்பேறு மருத்துவர்கள் இல்லாவிட்டாலும், மற்ற மருத்துவர்கள் மூலம் பிரசவம் பார்க்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்துக்கு கூடுதல் மகப் பேறு மருத்துவர்களைக் கேட்டு ள்ளோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago