வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள் தேர்தலில் விவசாயிகளால் வெளியேற்றப்படுவர் கிருஷ்ணகிரி எம்பி கருத்து

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டத்தை ஆதரிப்பவர்கள் தேர்தலில் விவசாயிகளால் அப்புறப்படுத் தப்படுவார்கள் என கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கிருஷ்ணகிரி யில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய வேளாண் சட்டத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குறித்து முறையாக அறிவிக்கப்படவில்லை. வேளாண் திருத்த சட்டம் மூலம் எந்த மாநிலத்தில் வேண்டும் என்றாலும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். அரை ஏக்கர் நிலம் உள்ள ஒரு விவசாயி எவ்வாறு தமிழகத்தில் இருந்து மும்பை போன்ற இடங்களுக்கு தங்கள் பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும். தமிழகத்தில் வேளாண் சட்டத்தை ஆதரிப்பவர்கள், வரும் சட்டப்பேரவை தேர்தலில் விவசாயிகளால் அப்புறப்படுத்தப்படுவார்கள். பாஜகவை ஆதரித்த அரசியல் இயக்கங்களின் தலையில் கை வைப்பது தான் பாஜகவின் வரலாறு. ஜம்மு, காஷ்மீரில் பாஜகவை வரவேற்ற மெகபூபா இன்று சிறையில் உள்ளார். மாநிலத்தின் அத்தனை உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. இதுதான் நாளை தமிழகத்திலும் நிகழும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்