கிராம மக்கள் வளர்ச்சித்திட்டம் தயாரிக்க திட்டக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

By செய்திப்பிரிவு

வேப்பனப்பள்ளியில் கிராம மக்கள் வளர்ச்சித்திட்டம் தயாரித்தல் குறித்து திட்டக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒனறியத்துக்கு உட்பட்ட 27 ஊராட்சிகளில், தொடர்பாக 2021-22-ம் ஆண்டுக்கு கிராம மக்கள் வளர்ச்சித்திட்டம் தயாரித்தல் தொடர்பான கிராம ஊராட்சி திட்டக்குழு உறுப்பினர்களுடன் ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி செயலர், மிஷன் அந்தோதயா ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்களுக்கும் மற்றும் இதர துறை அலுவலர்களுக்கும் 2 நாள் பயிற்சி நடந்தது. வேப்பனப்பள்ளி ஒன்றியக் குழுத் தலைவர் சரோஜினி பரசுராமன் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்து, பயிற்சியாளர்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் கரோனா தடுப்புப் பொருட்களை வழங்கினார்.

மக்கள் திட்டமிடல் குழு குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் கூறும்போது, ‘‘கிராம மக்களின் தேவையை அறிந்து, அதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 9 பேர் கொண்ட குழுவும், 16 துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப் படுகிறது. இக்குழுவினர் கிராம மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களது தேவைகளை அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ரேஷன் கடை, வேளாண்மை, அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து கிராமசபைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும். இதனைத் தொடர்ந்து அப்பணிகள் நிறைவேற்றப்படும். இதற்கான பயிற்சிகள் திட்டக்குழு உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுகிறது,’’ என்றார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்சர்பாஷா, மாவட்ட அளவிலான பயிற்றுநர்கள் வாசுகி, கற்பகம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்