புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக் குழு சார்பில், ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு, காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, கடந்த டிச.14, 15-ம் தேதிகளில் போராட்டம் நடைபெற்ற நிலையில், 3-வது நாளான நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ.சூரியன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். இதில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த 500-க்கும் அதிகமானோர் பங்கேற் றனர்.
இதேபோல, அகில இந்திய விவசாயி கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நேற்று 3-வது நாளாக காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் என்.வி.கண்ணன், பா.பாலசுந்தரம், பி.செந் தில்குமார், வீரமோகன், காளியப்பன், அயனாவரம் சி.முருகேசன், கோ.திருநா வுக்கரசு, சு.பழநிராஜன், ஆர்.அருணாச லம், டி.கண்ணையன், பி.கோவிந்தராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் பல்வேறு கட்சிகள், அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago